×

வரலாறு காணாத விலையேற்றம் பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.330

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நிலவும் ஸ்திரமற்ற அரசியல் சூழல், லஞ்சம், ஊழல் உள்ளிட்ட முறைகேடுகளால் அந்நாடு கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அந்நாட்டின் தற்போதைய ‘காபந்து அரசாங்கம்’ அறிவித்துள்ளது. கடந்த வெள்ளியன்று இரவு விலை உயர்வை காபந்து அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை ரூ. 330 என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானின் காபந்து பிரதமராக பதவியேற்ற அன்வருல் ஹக் காக்கர் ஒரே மாதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 20 சதவீதம் உயர்த்தியுள்ளார். சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானின் நிலைமைக்கு இரங்கி நிதியுதவி அளித்து வருகிறது. இருப்பினும் பொருளாதார மீட்சியை பெற பாகிஸ்தான் ஸ்திரமான அரசியல் தலைமை மூலம் நாட்டை ஆட்சி செய்வதே ஒரே வழி. பாகிஸ்தானில் ஒரு லிட்டர் அந்நாட்டு ரூபாய் மதிப்பில் ரூ.330க்கு விற்கப்பட்டாலும் அது இந்தியாவின் பெட்ரோல் விலையைவிட குறைவு. ஒரு இந்திய ரூபாயின் மதிப்பு 3.57 பாகிஸ்தான் ரூபாய். இதன்படி பார்த்தால், பாகிஸ்தானில் பெட்ரோலின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 92.51க்கு விற்கப்படுகிறது. அதாவது இந்தியாவில் விற்கப்படுவதைவிட ரூ.10 குறைவாகும்.

The post வரலாறு காணாத விலையேற்றம் பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.330 appeared first on Dinakaran.

Tags : Pakistan ,islamabad ,
× RELATED பாக்.கின் ஃபத்தா-2 ஏவுகணை சோதனை